பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் .
தொடர்ந்து கவின், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு, ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார். இவர் சத்ரியன், நட்புனா என்னன்னு தெரியுமா ' உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருந்தார்.
கடைசியாகக் கவின், ' லிஃபிட் ' திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஒரு அலுவலகத்தில் மட்டுமே நடக்கும் கதையை திகில் கலந்த பாணியில் எடுத்து இயக்குநர் வெற்றிக் கண்டார் .
இதனை அடுத்து இவர் நடித்த, 'அஸ்கு மாறோ' ஆல்பம் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
படங்களில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் கவின், 'டாக்டர்', 'பீஸ்ட்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
கவின் அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் 'டாடா' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் கவினின் டாடா படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதில் நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் டாடா படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை போரம் விஜயா மாலில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்து கொண்டனர்.
நகைச்சுவையுடன் காதலும் அதில் வரும் சிக்கல்களையும் டாடா படம் பேசி இருப்பது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. கவின் திரைப்பயணத்தில் ஒரு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் நம்பி உள்ளனர்.