- அடங்காத திமிர்பிடித்த ஆதரவற்ற இளைஞராக வரும் மைக்கேல் (சந்தீப் கிசன்)எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் மும்பையில் பிரபல தாதாவாக இருக்கும் குருவை(கௌதம் மேனன்) காப்பாற்றுகிறார்.
- பின்பு மைக்கலை குரு டெல்லிக்கு அனுப்ப அங்கே குருவின் மகளான நாயகியுடன் (திவ்யான்ஷா கௌசிக்) மைக்கேலுக்கு காதல் ஏற்படுகிறது.
- பின்பு காதலுக்காகவும் காதலிக்காகவும் எந்த எல்லை வரை செல்லும் ஒரு மிருகத்தனமான மனிதனாக மாறுகிறான் மைக்கேல். அதன் பிறகு என்ன நடக்கிறது ? என்பதை சொல்லும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் 'மைக்கேல்'.
சந்தீப் கிஷன்
- தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி ஹீரோவான 'சந்தீப் கிசனி'ன் நடிப்பு இப்படத்தில் பெருமளவு பேசப்படும் என்பது உறுதி.
- இவருக்கு வசனங்கள் கம்மியாக தான் இருக்கிறது என்றாலும், ஆக்சன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். இவரது கட்டுமஸ்தான உடம்பும், முரட்டுத்தனமான குணமும் ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கிறது.
- பெரும்பாலும் தனது முக அசைவிலேயே தன்னுடைய எமோஷனை வெளிப்படுத்தும் இக்கதாபாத்திரத்தை மிகவும் அழகாகவும், எதார்த்தமாகவும் செய்திருக்கிறார்.
- மொத்தத்தில் தமிழ் சினிமாவிற்கு மற்றொரு நல்ல ஆக்சன் ஹீரோ கிடைத்துள்ளார் என நம்பலாம் அதற்கு இப்படம் ஒரு சான்றாக இருக்கும்.
கௌதம் மேனன்
- 'தாதா'கதாபாத்திரம் என்றாலே இனி கௌதம் மேனன் தான் நினைவுக்கு வருவார் என்ற அளவிற்கு இப்படத்தில் அவருடைய கெத்தான நடிப்பும், கம்பீரமான உடல் மொழியும் வியக்க வைக்கிறது.
விஜய் சேதுபதி
- இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் படி அமைந்திருக்கிறது விஜய் சேதுபதி நடிப்பு.
- எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டருக்கான வலிமையை பல மடங்கு தன்னுடைய நடிப்பின் மூலம் கூட்டுவார் விஜய் சேதுபதி அதுபோலதான் இப்படத்தில் அவருக்கு கேமியோ ரோல் என்றாலும்,தான் வரும் இடமெல்லாம் விசில் பறக்க வைக்கிறார். ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் அவரது நடிப்பு 'மாஸ்'.
வரலட்சுமி
- புதுமையான ரோல்களை தேடித் தேடி நடிக்கும் வரலட்சுமிக்கு இக்கதாபாத்திரம் மிக சவாலாக அமைந்திருக்கிறது, ஆனால் அதை சுலபமாக செய்து அசத்தியிருக்கிறார். அவருடைய அதிரடி நடிப்பை வெளிப்படுத்தும் படமாக இது அமைந்திருக்கிறது.
ரஞ்சித் ஜெயக்கொடி (இயக்குனர்)
- புரியாத புதிர், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் இப்படத்தை ஒரு காதல்-ஆக்சன் கலந்த திரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறார்.
பாசிட்டிவ்ஸ்
- புதுமையான கதைக்களம்
- படம் 90'களில் நடப்பது போல ரெட்ரோ ஸ்டைலில் இருந்தாலும் அதை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
- பின்னணி இசை நம்மை கதை களத்திலேயே வைத்திருக்கிறது.
- விஜய் சேதுபதியின் கேமியோ மாஸ்.
- ஆக்சன் காட்சிகள் நம்பும் படியாகவும் எதார்த்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு.
- கிளைமாக்ஸ் காட்சியின் ட்விஸ்ட் எதிர்பாராதவை.
நெகட்டிவ்ஸ்
- படத்தின் கதை நன்றாக அமைந்திருந்தாலும் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதால் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.
- படத்தின் நீளமும் படத்திற்கு சற்று தடையாக அமைந்திருக்கிறது.
- கதாபாத்திரங்கள் எல்லாம் சிறப்பாக நடித்திருந்தாலும் ஏனோ அவை திரைக்கதைக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை.
- பல காட்சிகள் நமக்கு கே.ஜி.எப் படத்தை நினைவூட்டுவதை மறுக்க முடியாது.
- மொத்தத்தில் உங்களுக்கு பொறுமையிருந்தால், நிதானமாக இப்படத்தை பார்த்தால் உங்களுக்கு பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி கதாபாத்திரங்களும், இசையும் சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகமும் விறுவிறுப்பும் குறைந்திருப்பதால் மைக்கலை ரசிக்க மனம் வரவில்லை.