Type Here to Get Search Results !

ACTRESS KEERTHY SURESH MARRIAGE: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்

  • ACTRESS KEERTHY SURESH MARRIAGE: நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
  • அதுமட்டுமின்றி 13-ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், அவர் காதலிக்கும் நபர் தற்போது கேரளாவில் ரிசார்ட் உரிமையாளராக இருப்பதாகவும் தீயாக தகவல்கள் பரவியது.
  • இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்தி தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருடைய தாயார் மேனகா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா " என்னுடைய மகள் திருமணம் குறித்து பரவும் எந்த செய்தியும் உண்மை இல்லை.
  • இது வெறும் வதந்தி தகவல் தான். இந்த மாதிரி வைரலாகும் வதந்தி செய்திகளை பார்க்கக் கூட நாங்க விரும்பறதில்லை. மேற்கொண்டு இது தொடரபா பேசுவதற்கு எதுவுமே இல்லை" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.